செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

காதல் மரம்

பார்வைகள் பின்னிய பொழுதில்
உணர்வெழுச்சியின் உச்சத்தில் ஓர்
விதையிட்டுச் சென்றோம்...

முத்தங்களின் ஈரத்தில்
அணைப்பின் வெப்பத்தில்
நம்பிக்கையுரத்தில்  மெல்லச்செழித்ததது...

வேர் நீட்டி  கிளை பரப்பி விருச்சமென
விரிந்தது நம் காதல் மரம்...

ஆயிரம் கைகள் நீட்டி
அரவணைத்தது  அதன் ப்ரிய நிழலும்...

பின்னொரு நாளின் இருள் சூழ் இரவில்
முறித்துக்கொண்ட நம்முறவை
இலையசையாது பார்த்துக்கொண்டிருந்ததது...

சந்தோசப்பூக்கள் பூத்த அதன் நுனியில்
வெறுமைத்திரவம் வழிகிறது இப்பொழுது...

தீட்டிய மரத்தில் கூர் சோதிப்பென
சந்தேக  வெட்டுக்கள் வார்த்தைக்  கத்திகளால்...

பிரிவின் கோடலியால் சந்திப்பின்
கிளைவெட்டித் தள்ளினாலும்
மண்ணோடிப்போயிருக்கும்
நினைவின் வேர்களை என்ன செய்ய?..

                                                                          

14 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

நினைவுகளின் பிரதிபலிப்பு மிகவும் அருமை...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தம்பி பிரமாதமான கவிதை... பாராட்டுக்கள்.. அடிக்கடி நிறைய எழுதுங்கள்....

மரமும்.. காதலும்.. சில நாட்களேனும் மனதை விட்டு அகலா....

Jey சொன்னது…

:)

Balaji saravana சொன்னது…

@ வெறும்பய
நன்றி நண்பா..

@கே.ஆர்.பி.செந்தில்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அண்ணா..
நிறைய எழுத முயற்சிக்கிறேன்..

@jey
நன்றி நண்பா..

மோகன் குமார் சொன்னது…

நல்லாருக்குங்க. மற்ற கவிதைகளும் வாசித்தேன். கவிதை உங்களுக்கு இயல்பா வருது. தொடருங்க

Balaji saravana சொன்னது…

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மோகன் குமார் அண்ணா..

இராமசாமி கண்ணண் சொன்னது…

வந்தேன் வாசித்தேன் மகிழ்ந்தேன் தேன் போன்ற கவிதையால் :) நன்றி.

Balaji saravana சொன்னது…

நன்றி இராமசாமி கண்ணன்

கார்க்கி சொன்னது…

//பின்னொரு நாளின் இருள் சூழ் இரவில்
முறித்துக்கொண்ட நம்முறவை//

ஆவ்வ்வ்வ்..நீஙக்ளும் நம்மாளா சகா?

:((((

Balaji saravana சொன்னது…

@ கார்க்கி,
ஆமா சகா :(
உங்க சங்கத்துல என்னையும் சேத்துக்கங்க பாஸ்...
வருகைக்கு மிக்க நன்றி கார்க்கி.

ர‌கு சொன்னது…

க‌டைசி நாலு வ‌ரிக‌ள் ந‌ச் பாலாஜி!

சௌந்தர் சொன்னது…

பிரிவின் கோடலியால் சந்திப்பின்
கிளைவெட்டித் தள்ளினாலும்
மண்ணோடிப்போயிருக்கும்
நினைவின் வேர்களை என்ன செய்ய?//

இந்த வரிகள் மிகவும் அழமாக இருக்கிறது...தொடருங்கள் நண்பா...

Balaji saravana சொன்னது…

நன்றி ரகு!

நன்றி சௌந்தர்!

பெயரில்லா சொன்னது…

bala really nice dear..... kavithai um unnai pola sema cute da chlm

கருத்துரையிடுக