வியாழன், 5 ஆகஸ்ட், 2010

முடிவிலி

சந்திப்புகளின் கடைசிக் கணங்கள்
பிரிவின் பெருவெளிப் படிகளாதலால்
துறக்க எத்தனிக்கிறேன்
நம் சந்திப்புகளை..
முகம் பாரா நாட்களில்
நீண்ட என் மனக் கரையை
விழுங்கிடத் துடித்து  நில்லாமல்  வரும்
உன் நினைவலைகள்...
அலையடித்து ஓய்ந்த ஓர்
சுழற்சியின் முடிவிலியாய்
பின்னியிருக்கிறாய் என் கனவுகளில்...
கணக்கற்ற கனவுகளின் ஓயாத
பெருங்குரல் சத்தங்களில்
திறந்து கொள்கின்றன நம்
சந்திப்புக்கான வாசல்கள்..
சந்திப்புகளின் கடைசிக் கணங்கள்?...
                                                                     

9 கருத்துகள்:

Sweatha Sanjana சொன்னது…

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

கோவை குமரன் சொன்னது…

வார்த்தைகள் அருமை நண்பரே..எங்காவது notes கிடைக்குமா...வாழ்த்துக்கள்..

Balaji saravana சொன்னது…

நன்றி குமரன்.
நோட்ஸ் கிடைச்சவுடனே அனுப்பி வைக்கிறேன் நண்பா :)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

பின்னியிருக்கிறாய் என் கனவுகளில்...//
அருமை பாலாஜி..

Balaji saravana சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேனம்மை லக்ஷ்மணன்!

ஹேமா சொன்னது…

//முகம் பாரா நாட்களில்
நீண்ட என் மனக் கரையை
விழுங்கிடத் துடித்து நில்லாமல் வரும்
உன் நினைவலைகள்...//

மீண்டும் மீண்டும் வாசித்தேன் பாலா.

Balaji saravana சொன்னது…

சில நேரங்களில் சில நினைவுகள் நம்மை முழுமையாக ஆக்கிரமித்து விடுமே தோழி!
நன்றி ஹேமா.

Ananthi சொன்னது…

///சந்திப்புகளின் கடைசிக் கணங்கள்
பிரிவின் பெருவெளிப் படிகளாதலால்........///

இந்த வரிகள் சூப்பர்....
ஒவ்வொரு சந்திப்பின் கடைசி நிமிடங்களும் எவ்ளோ கடினம்னு அழகா சொல்லிட்டீங்க..
வாழ்த்துக்கள்.. :-))

Balaji saravana சொன்னது…

நன்றி ஆனந்தி!

கருத்துரையிடுக