ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

அன்பின் நீட்சி

காயமுற்ற நாயொன்றின்
காயாசேற்றின் அக்கறையுதறி
கரிசனத்தின் தூதராகி
கைகொள்ளாது மார்பனைந்து
" பாவம்ப்பா " வென,
முகம்பார்த்து நீர்கோர்த்து
மறுப்பேதும் நிகழாதென
மருந்திட்டு துணிசுற்றி
முத்தம்சிந்தி உடல்நீவி
பரிதவித்துப் பாலூட்டி
கவனித்தரவனைக்கும்
ப்ரியமகள் எனக்களிக்கும்
அன்பின் நீட்சியானதது!
                                          

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குங்க..

Chitra சொன்னது…

good one. :-)

Balaji saravana சொன்னது…

நன்றி கோவை குமரன்.

நன்றி சித்ரா.

சௌந்தர் சொன்னது…

நல்ல கவிதை

Balaji saravana சொன்னது…

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சௌந்தர்!

ஹேமா சொன்னது…

பாலா....குழந்தைகள் காட்டும் அன்பு கள்ளமில்லாமல் என்றுமே நீட்சியானதுதான்.

Balaji saravana சொன்னது…

உண்மை தான் ஹேமா!
அன்பு எப்படி இருக்கவேண்டுமென சில நேரங்களில் அவர்கள் நமக்கு
உணர்த்திவிடுகிறார்கள்.

சந்திரிகை சொன்னது…

கருவில் சுமந்து பெற்றெடுக்கும் சுகம் பெரிதென்றாலும்

குழந்தை தவழ்ந்து நடந்து வருவதை பார்ப்பது அன்னைக்கு

அளவிலா இன்பம். உன் எண்ண சிதறல்களில் தவழ்வை

ரசிக்கிறேன். நடந்து ஓடி வரும் நாளை எதிர் பார்க்கிறேன்

Balaji saravana சொன்னது…

உங்கள் ஆசியுடன் ஜீவாம்மா!

கருத்துரையிடுக