புதன், 28 ஜூலை, 2010

நீளும் காத்திருப்புகள்

வரிசை மிகும் கேள்விகளின்
ஒற்றை பதில் எழுதவிருக்கும்
என் முகம்..
கேட்டறியாமல்  தன்னிச்சை
சுயபிம்பம் கட்டிடத்
தளைப்படும் நீ..
முடிவுறா மௌனத்தில் 
சில துளி கண்ணீரும்
திரும்பி நடத்தலில்
சிறு தடுமாற்றமும்
கேள்வியின் மிச்சங்களனப்படுமா?
கேளாமல் பதிலுரைக்கும்
கலையை யாரிடம் கற்க?
பதில் பெறுவன பழமைகளாகி
நீளும் காத்திருப்புகள்
நின் கேள்விகளுக்காய்..
                                             

9 கருத்துகள்:

LK சொன்னது…

//சில துளி கண்ணீரும்
திரும்பி நடத்தலில்
சிறு தடுமாற்றமும்
கேள்வியின் மிச்சங்களனப்படுமா? /

good one

Balaji saravana சொன்னது…

மிக்க நன்றி LK...

Chitra சொன்னது…

கேளாமல் பதிலுரைக்கும்
கலையை யாரிடம் கற்க?
பதில் பெறுவன பழமைகளாகி
நீளும் காத்திருப்புகள்
நின் கேள்விகளுக்காய்..


....ஆசையுடன் ஏக்கமும் வெளிப்படுத்தி இருக்கும் அருமையான வரிகள்...... பாராட்டுக்கள்!

Balaji saravana சொன்னது…

வாங்க சித்ரா!
தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

கோவை குமரன் சொன்னது…

அருமை தோழரே..
வாழ்த்துகள்

மங்குனி அமைசர் சொன்னது…

good one

Balaji saravana சொன்னது…

@ கோவை குமரன்
வாழ்த்துக்கு நன்றி நண்பா!

@மங்குனி அமைச்சர்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அமைச்சரே!

ஹேமா சொன்னது…

பாலா...எதிர்ப்பார்ப்பின் காத்திருப்புக்களுக்குள்ளும் கேள்விகளும் பதில்களும் மௌனமாய்த்தான் !

Balaji saravana சொன்னது…

// எதிர்ப்பார்ப்பின் காத்திருப்புக்களுக்குள்ளும் கேள்விகளும் பதில்களும் மௌனமாய்த்தான் ! //
உண்மை தான் ஹேமா!
தங்கள் வருகைக்கு நன்றி!

கருத்துரையிடுக