வெள்ளி, 23 ஜூலை, 2010

இழப்பின் வலி

நெஞ்சக் கூக்குரலின் அடர்த்தியை உதடுகள்

கனத்த மௌனங்களாய் மொழிபெயர்க்க...

இமை கிழிக்கும் இழப்பின் வலிகள்

எண்ணிலடங்கா கண்ணீர்த் துளிகளாய் உருமாற..

குருதி எரித்திடும் துக்கத்தின் அனல்கள்

மூச்சுக் காற்றாய் வெளியேற...

தேங்கிய சிந்தனைகள் உன் நினைவச்சுகளில்

அறையப்பட்டு அலறிக் கிடக்க..

கூரிய வேதனை முட்கள் உடலெங்கும்

குத்தி முறிந்து கிடக்க...

உன் பிரிவின் அவலங்களை முகமெங்கும்

அள்ளிப் பூசிக்கொள்கிறேன் நான்..

                                                                         

6 கருத்துகள்:

கோவை குமரன் சொன்னது…

வாழ்த்துகள்..நல்லா இருக்குங்க..

Balaji saravana சொன்னது…

வாழ்த்துக்கு மிக்க நன்றி கோவை குமரன்.

பிரசன்னா சொன்னது…

பிரிவு தாங்க முடியாத வலிதான்.. ரொம்ப நல்லா இருக்கு

Balaji saravana சொன்னது…

நன்றி பிரசன்னா.

Karthick Chidambaram சொன்னது…

நல்லா இருக்குங்க..

Balaji saravana சொன்னது…

நன்றி கார்த்திக் சிதம்பரம்.

கருத்துரையிடுக