திங்கள், 19 ஜூலை, 2010

உறவின் முறிவுபழகிய பாதையில் குத்திய

முள்ளை விடவும் வலித்தது

என் மீதான உன் அலட்சியங்கள்...


நாம் வளர்த்த சந்தோஷ மீனின் வாழ்நாள்

குறைந்து கொண்டே வருகிறது

நம் விட்டுக்கொடுத்தலின் துளிகள் குறைவதால்...


இணைந்திருந்த நம் காதலின் பாதைகள்

இப்போது எதிரெதிர் திசைகளாயின..


அக்கறையின் பிஞ்சுக் கன்னங்களில்

ஓங்கி அறைகிறது நம் சுயநலங்கள்..


எப்பொழுதும் தோற்கிறது,

ஒப்பனைப் பொய்கள் முன்

நம் அழுக்கான உண்மைகள்...


இப்பொழுதும் காத்திருக்கின்றன

நமக்கான நம் நிமிடங்கள்..

                                                                                                                        
                                     

11 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமையான கவிதை..........

வாழ்த்துக்கள்

Ananthi சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ananthi சொன்னது…

மிக அருமையான வரிகள்...
மனதைச் சொல்லும் வரிகள்..

Ananthi சொன்னது…

உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்.. பெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

Balaji saravana சொன்னது…

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மற்றும் பரிசுக்கும் நன்றி ஆனந்தி

GOPI சொன்னது…

ஒவ்வொரு வரிகளும்
உங்களது நட்பின் உன்னதத்தை வெளிபடுத்துகின்றன.
மிகவும் அற்புதம் நண்பரே!!!
வாழ்த்துக்கள்....

பிரசன்னா சொன்னது…

நீங்க பெரிய ஆளா வருவீங்க.. ஏன்னா எனக்கு புரியிற மாதிரி கவிதை எழுதறீங்க ஹீ ஹீ

Balaji saravana சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வில்சன் சொன்னது…

கவிதை மிகவும் அருமை நண்பரே! குறிப்பாக //எப்பொழுதும் தோற்கிறது,

ஒப்பனைப் பொய்கள் முன்

நம் அழுக்கான உண்மைகள்...//

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன

Balaji saravana சொன்னது…

@Gopi..
//ஒவ்வொரு வரிகளும்
உங்களது நட்பின் உன்னதத்தை வெளிபடுத்துகின்றன.
மிகவும் அற்புதம் நண்பரே!!!
வாழ்த்துக்கள்.... //


தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா...@prasanna..
//நீங்க பெரிய ஆளா வருவீங்க.. ஏன்னா எனக்கு புரியிற மாதிரி கவிதை எழுதறீங்க ஹீ ஹீ //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா..

ஏதும் உள்குத்து இல்லையே :)

@vilson

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வில்சன்..

கார்த்திக் சொன்னது…

அன்பு நண்பா,

வாழ்த்துக்களுடன் துவங்குகிறேன்.

சுயநலமான உண்மைகளை அழுக்கேறிய உண்மைகளாக சித்தரித்தமை அழகு!!!

நமக்கான நிமிடங்கள் இன்னும் இருக்கின்றன என்பது உன்னுடைய மணம் இன்னும் அந்த உறவை நாடுகிறது என்பதை உணர்த்துகிறது.

அருமை நண்பா.

கார்த்திக்

கருத்துரையிடுக