வெள்ளி, 16 ஜூலை, 2010

போலி முகம்நமக்கான முகமூடிகளை நாமே

தயார் செய்து கொள்கிறோம்..

மிகக் கச்சிதமாக அவை பொருந்தி விடுகின்றன

நம் முகத்தின் மேடு பள்ளங்களில்..

முகத்திரையின் சலனங்களை அவை

ஒருபோதும் வெளிக்காட்டுவதே இல்லை..

மிகச் சரியாய் பாவனைகள் செய்கின்றன

மகிழ்ந்து சிரிப்பது போல்..

சிலநேரங்களில் கண்ணீர் பெருக்கிக்

கொள்கின்றன அழுவது போல்..

எளிதாக கற்றுக் கொள்கின்றன

அதீத வன்மம் வளர்க்க..

இயல்பாய் இருப்பது போல் நடிக்கின்றன

பொறாமைத் தீயின் ஜ்வாலைகள்

வெளித் தெரியாதபடி...

கையறு நிலைகளில் வெறித்துப் பார்க்கின்றன

எந்தச் சலனமும் இல்லாமல்..

சற்றுக் கலைந்த முகமூடிகளை கவனமாய்

நாம் சரி செய்து கொள்கிறோம்

ஏதேனும் இயல்புகள் வெளிவந்து விடாதபடி..

முகமூடிகள் இல்லாமல் எப்போதும் நாம்

சந்திப்பதே இல்லை சக மனிதனை..

3 கருத்துகள்:

அமைதிச்சாரல் சொன்னது…

//சற்றுக் கலைந்த முகமூடிகளை கவனமாய்
நாம் சரி செய்து கொள்கிறோம்
ஏதேனும் இயல்புகள் வெளிவந்து விடாதபடி//

ரசித்த வரிகள்..அருமையான கவிதை.

Balaji saravana சொன்னது…

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி அமைதிச்சாரல்...

பெயரில்லா சொன்னது…

// முகமூடிகள் இல்லாமல் எப்போதும் நாம்

சந்திப்பதே இல்லை சக மனிதனை.. //

இதை விட அழகாக மனித இயல்பை சொல்ல முடியாது.
வாழ்த்துக்கள்.

-பா.சுகந்தராஜ்

கருத்துரையிடுக