வியாழன், 8 ஜூலை, 2010

மழை


மழை வரும் நாட்களில் ஓடி ஒளிந்து
கொள்பவன் நானில்லை...
வானுக்கும் பூமிக்கும் நிகழும் உறவின்
உச்ச நிலை அமிர்தம் அது...
வான்மழை வலுக்கும் முன்பே
சுவாசமெல்லாம் நிறைகிறதே மண்வாசம்..
வீழும் மழைத்துளியால் வீடெங்கும்
சந்தோஷச் சிதறல்கள்..
ஓட்டுச் சரிவில் விழும் நீரை
முகத்திலடிக்கும் தங்கையின் பற்களும்
நடுங்கும் குளிரில்..
கொல்லை வேம்பும் குயிலும்
தலை சிலுப்பும் தன்னிச்சையாய்...
வெளிச்சமடிக்கும் மின்னலும் பெருங்குரல்
இடியும் கலைத்ததில்லை எங்கள் ஆட்டத்தை...
குடை பிடித்தோடி வரும் அம்மாவின்
அன்பிலும் நனைய
இன்னும் வேண்டும் மழை...

5 கருத்துகள்:

Karthik சொன்னது…

என் இனிய நண்பனுக்கு,
மென் மேலும் வளர என் மனம் கனிந்த நல வாழ்த்துக்கள்.
கார்த்திகேயன் ரா

வெறும்பய சொன்னது…

வணக்கம் நண்பரே...தங்கள் வரவு நல்வரவாகுக...

பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்...

முதல் கவிதையே அருமையாக உள்ளது...

தொடரட்டும் உங்களால் கவிதைப் பணி..

Bala சொன்னது…

தங்களின் வாழ்த்து எனக்கு உற்சாகம் தருகிறது..
தொடர்ந்து எழுத உத்வேகம் அளிக்கிறது.
நன்றி நண்பரே...

சௌந்தர் சொன்னது…

அம்மாவின்
அன்பிலும் நனைய
இன்னும் வேண்டும் மழை///

ஒரே நேரத்தில் இரண்டு மழையிலும் நனைய ஆசை

Balaji saravana சொன்னது…

@ சௌந்தர்
நன்றி நண்பா!

கருத்துரையிடுக